‘செபாஸ்டியன் பி.சி. 524’ படக்காட்சியை வெளியிட்ட லாவண்யா திரிபாதி!
இளம் நடிகர் கிரண் அப்பாவரம் தனது முதல் படமான ‘ராஜா வாரு ராணி வாரு’ படத்தின் மூலம் பார்வையாளர்களை ஈர்த்து, திரைத்துறையின் கவனத்தை பெற்றவர். அப்படம் அசலான கிராமத்து கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டது. அவரது இரண்டாவது படமான ‘எஸ்ஆர் கல்யாணமண்டபம்’ ஹிட் பாடல்களால் பிரபலமானது. தற்போது அவரது மூன்றாவது படமான ‘செபாஸ்டியன் பி.சி. 524’ பார்வையாளர்களின் அன்பை பெற தயாராகிவிட்டது. ஒரு அசலான கதையுடன் அப்படம் வந்து கொண்டிருக்கிறது. இப்படத்தின் ஒரு காட்சியை நடிகை லாவண்யா திரிபாதி இன்று வெளியிட்டுள்ளார்.
பாலாஜி சய்யபுரெட்டி இயக்கும் இப்படத்தில் கிரண் நாயகனாக நடிக்கிறார். ப்ரமோத் மற்றும் ராஜு தயாரிக்கும் இப்படம் மாலை கண்நோயைப் பற்றியது. இன்று வெளியிடப்பட்ட அந்த காட்சியில் ஒரு தேவாலயம், இயேசுவின் புகைப்படம், மற்றும் படத்தின் ஹீரோ ஆகிய விஷயங்கள் தனித்துவமான முறையில் காட்டப்படுகின்றன. சுவாரஸ்யமான பின்னணி இசைய...
