ஜாதி ஒழியாத வரை நம் சமூகம் அடிமையாகத் தான் இருக்க வேண்டும் “ முந்திரிக்காடு “ இசை வெளியீட்டு விழாவில் சீமான் பேச்சு
ஆதி திரைக்களம் தயாரிப்பில் மு.களஞ்சியம் இயக்கியுள்ள படம் முந்திரிக்காடு. நேற்று இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழாவில் இயக்குநர் மு.களஞ்சியம் பேசியதாவது,
"அண்ணன் சீமான் சாதிய கட்டமைப்பிற்கு எதிரான எங்கள் முந்திரிக்காடு படத்தை மிகவும் கவனமாகப் பார்த்துக்கொண்டார். அண்ணன் சீமான் அவர்களுக்கு இப்பட டீம் மிகவும் நன்றியினை தெரிவித்து கொள்கிறது.
சசி சார் என்றால் எங்களுக்குப் பயம் உண்டு. அவர் எனக்கு ஒரு சகோதரர் போல. விவேகானந்தன் சார் எனக்கு முதல் படம் கொடுத்ததிற்கான காரணம் என்னுடைய செயல்பாடுகளை அவர் கவனித்து வந்தது தான். இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றியினைக் கூறிக்கொள்கிறேன்" என்றார்
அய்யா நல்லக்கண்ணு பேசியதாவது,
"எனக்கு களஞ்சியத்தைப் பார்க்கும் போதெல்லாம் படத்தைப் பற்றி கேட்பேன். ஏனென்றால் இன்று சினிமாவில் நிறையப் போட்டியிக்கிறது. நாங்களும் கொள்...
