சீனுராமசாமி இயக்கும் “ இடிமுழக்கம்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
Skyman Films International கலைமகன் முபாரக் தயாரிக்க, GV பிரகாஷ் குமார்-காயத்ரி நடிப்பில், இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகும் “ இடிமுழக்கம்” படத்தின் படபிடிப்பு நிறைவடைந்தது.
தமிழ் திரையுலகில் பல தரமான படைப்புகளை தயாரித்து வரும் Skyman Films International கலைமகன் முபாரக், தயாரிப்பில், தற்போது வேலன் படம் வெளியீட்டு தயாராக உள்ளது. இந்நிலையில் அவரது தயாரிப்பில் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நெற்றியை மகிழ்ச்சியுடன் வெளியுட்டுள்ளார்.
Skyman Films International தயாரிப்பில், விமர்சன ரீதியில் பாராட்டுகளை பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில், GV பிரகாஷ் மற்றும் காயத்ரி நடிப்பில் உருவான “இடிமுழக்கம்” திரைப்படத்தின் படபிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து, படக்குழு மரியாதை நிமித்தமாக, வறட்சியால் பாதிக்கபட்ட தென் மாவட்ட நிலங்களை வளமாக மாற்றிய மரியாதைக்குரிய ஜா...



