
விதார்த் நடிக்கும் “நட்சத்திரா” ஃபர்ஸ்ட் லுக் !
தயாரிப்பாளர்களுக்கும் விநியோகதஸ்கர்களுக்கும் லாபம் தரும் நடிகராக, தனது வித்தியாசமான பாத்திரங்கள் மூலம் தொடர் வெற்றி படங்களை தந்து வருகிறார் நடிகர் விதார்த். தற்போது வெளியாகியுள்ள அவரது அடுத்த படமான “நட்சத்திரா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மீடியா மத்தியிலும், இணைய உலகிலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. பாதுகாவலன் உடையில் மாயங்களை துப்பறியும் விதமாக விதார்த் இருக்க பின்னணியில் பெண் ஆவிகள் இருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீது பலத்த எதிர்பார்ப்பை தூண்டுகிறது.
படம் குறித்து இயக்குநர் மனோஜ் ராம் கூறியதாவது...
மர்மங்கள் நிறைந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் “நட்சத்திரா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஹாரர் கலந்து பயப்படுத்தும் அம்சமும் கொண்டிருக்கும் எனும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பற்றி படக்குழு கூறுவதை விட நேரில் திரையரங்கில் அந்த ஆச்சர்யங்கள...