Sunday, October 4

Tag: Sengalam” A ZEE5 Original

‘செங்களம்’ – வெப் சீரிஸ் விமர்சனம்

Reviews
அரசியலை மையமாக வைத்து இப்படி ஒரு வெப் சீரிஸ் தமிழில் வந்திருக்கிறதா என யோசிக்கத் தோன்றும் வகையில் அடி முதல் நுனிவரை சமகால அரசியலை நினைவு படுத்தும் வகையில் வந்திருக்கும் வெப் சீரிஸ்தான் செங்களம். துவக்கமே அபாரமாக இருக்கிறது. கருவேலங்காட்டுப் பகுதியில் ஒரு பெண்மணி சாப்பாட்டு தூக்குடன் நடந்து வர, துணையாக வரும் நாயின் கழுத்திலும் ஒரு சாப்பாட்டு தூக்கு தொங்குகிறது. ஓரிடத்தில் நின்று அந்தப் பெண் குலவை சத்தமிட ஒளிந்திருக்கும் மூன்று இளைஞர்கள் வெளியே வருகின்றனர். அந்தப் பெண்மணியின் மகன்கள்தான் அந்த மூவரும் என தெரிய வர, அவர்கள் ஒளிந்திருக்கும் காரணம் ப்ளாஷ் பேக் காட்சிகளாக விரிகிறது... சுமார் நாற்பது ஆண்டுகாலம் விருதுநகர் நகராட்சித் தலைவர் பொறுப்பில் பரம்பரை பரம்பரையாக சரத் லோகித்ஸவா குடும்பம் ஆட்சி செய்கிறது. சிட்டிங் சேர்மனான அவரது மகன் பவன், விபத்தொன்றில் அகால மரணமடைய அந்த இடத்துக்க...