கிரிக்கெட்டை மாற்றியமைத்த மிதாலி ராஜின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ‘சபாஷ் மிது’ திரைப்படம்
சபாஷ் மிது படத்தின் முதல் டீஸர் மூலம் கிரிக்கெட் விளையாட்டின் விதியினுடைய சார்புகளை உடைத்தெறிந்துள்ளது Viacom18 Studios
டாப்ஸி பன்னுவின் நடிப்பில், சபாஷ் மிது திரைப்படம், இந்தியாவில் கிரிக்கெட்டை மாற்றியமைத்த மிதாலி ராஜின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
டீஸர் லிங்க் : https://youtu.be/rX_Xr-F-hEQ
2022 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான சபாஷ் மிது திரைப்பட டீஸர் இன்று வெளியிடப்பட்டது. 2022 ஐசிசி மகளிர் உலகக் கோப்பையில் இந்திய பெண்கள் அணியின் கேப்டனாக, நீல நிற உடையணிந்த பெண்களை வெற்றிகரமாக வழிநடத்தி, பல உலக சாதனைகளைத் தொடர்ந்து முறியடித்து வரும் இந்திய கேப்டனான மிதாலி ராஜின் வாழ்க்கையை இப்படம் விவரிக்கிறது.
டீஸர் ஜென்டில்மேன் விளையாட்டான கிரிக்கெட்டில் பெண்கள் பங்குகொண்ட நீல நிற அணியின் சாதனைகளை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது, மிதாலியி...
