சக்திஸ்ரீ கோபாலனின் ‘நீ போதுமே’ காதலர் தினத்தன்று வெளியானது!
ஃபிலிம் ஃபேர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ள இசைக் கலைஞரான சக்திஸ்ரீ கோபாலனிடம் இருந்து காதலர் தினத்தன்று ஒரு சிறப்பு பாடல் வெளியாகியுள்ளது. ‘நீ போதுமே’ என்று பெயரிடப்பட்டுள்ள எளிமையான, மென்மையான இந்த தமிழ் பாப் சிங்கிள், காதலை கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது.
இப்பாடலை சக்திஸ்ரீ கோபலனே எழுதி, இசையமைத்து தயாரித்துள்ளார். கிடார் கலைஞரும் பாடகருமான அக்ஷய் யசோதரன் இதில் தோன்றுகிறார்.
2021 பிப்ரவரி 14 அன்று வெளியாகியுள்ள ‘நீ போதுமே’, காதலில் இருப்பவர்களின் உணர்வுகளையும், காதலின் மென்மை மற்றும் வலிமையையும் இசை வடிவில் வெளிப்படுத்துகிறது. 2020-ம் வருடம் வீடுகளே உலகமாக மாறியிருந்த வேளையில் எழுதி, இசையமைக்கப்பட்ட இப்பாடல், நேசத்துக்குரியவர்களின் பாசம் குறித்து பாசாங்கில்லாமல் பதிவு செய்துள்ளது.
சிறந்த பாடகியும், இசை ஏற்பாட்டாளருமான கல்யாணி நாயரின் உணர்வுப்பூர்வமான இசைக் கோர்வைகளுடனு...
