Wednesday, November 18

Tag: shashthi

தாய்க்கும் மகனுக்குமான பிணைப்பை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘சஷ்தி’ குறும்படம்

News
  Cathy & Raphy பிலிம்ஸ் சார்பில் தயாராகியுள்ள குறும்படம் ‘சஷ்தி’. ஜூட் பீட்டர் டேமியான் என்பவர் இந்த குறும்படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். 30 நிமிடங்கள் ஓடும் விதமாக உருவாகியுள்ள இந்த குறும்படம் ஆகஸ்ட்-15ஆம் தேதி ஐ ட்யூன்ஸ் மற்றும் கூகுள் பிளே ஆகியவற்றில் ரிலீசாகி உள்ளது. தாய்க்கும் மகனுக்குமான உறவை மையப்படுத்தி உருவாகியுள்ளது இந்த ‘சஷ்தி' குறும்படம்..தான் வளர்ப்பு மகன் என்பதை அறியாமலேயே வளரும் சிறுவன் ஒருவன், சாதாரண பெண்ணாக இருக்கும் ஒருவரை எப்படி கடவுள் என நினைக்கும் அளவுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரை பற்றிய அவனுடைய அபிப்ராயங்கள் எப்படி மாறுகின்றன என்பதை அழகாக சொல்கிறது இந்த குறும்படம்..இந்த படம் லைவ் ஆடியோ ரெக்கார்டிங் முறையில் உருவாகியுள்ளது தனிச்சிறப்பு. செம்மலர் அன்னம், லிசி ஆண்டனி, மாஸ்டர் ஜெப்ரி ஜேம்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்....