“ஜாக்பாட் படத்தின் வெற்றி உறுதியாகி விட்டது” – பிரபலங்கள் பாராட்டு!
2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில் ரேவதி ஜோதிகா நடித்துள்ள படம் ஜாக்பாட். கல்யாண் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி சார்பாக சக்திவேலன் உலகெங்கும் வெளியிடுகிறார். ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்றது.
விழாவில் எடிட்டர் விஜய் வேலுகுட்டி பேசியதாவது,
"இந்தப்படத்தில் வேலை செய்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் சாருக்கு நன்றி. ஒரு சின்ன வேலை சொன்னாலும் அதற்கான ரிப்ளே உடனே கொடுப்பார். ஜாக்பாட் ட்ரைலரைப் பார்த்த அனைவரும் ரஜினி சார் படத்தின் ட்ரைலர் போல இருக்கிறது என்றார்கள். அது மகிழ்ச்சியாக இருக்கு" என்றார்
ஒளிப்பதிவாளர் ஆனந்த் பேசியதாவது,
"படம் ரொம்ப ஜாலியா இருந்தது. கிரேன்ல இருக்கும் போது சூட்டிங்கில் பலமுறை சிரித்து இருக்கிறோம...
