விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் ‘பம்பர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
வேதா பிக்சர்ஸ் தயாரிப்பில் செல்வக்குமார் இயக்கத்தில் வெற்றி-ஷிவானி நடிக்கும் 'பம்பர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகிறது
கேரள மாநில லாட்டரியை மையமாகக் கொண்ட 'பம்பர்' என்ற தமிழ் திரைப்படத்தில் ‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ புகழ் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார்.
வேதா பிக்சர்ஸ் பேனரில் சு. தியாகராஜா தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர்கள் மீரா கதிரவன், ‘கொம்பன்’ மற்றும் சமீபத்தில் வெளியான 'விருமன்' புகழ் முத்தையா உள்ளிட்டவர்களிடம் பணியாற்றிய அனுபவமுள்ள எம். செல்வக்குமார் இயக்குகிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஆகஸ்ட் 31 விநாயக சதுர்த்தி தினத்தன்று வெளியாகிறது. வித்தியாசமான முறையில் அனைவரது கவனத்தையும் கவரும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
பம்பர் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இப...
