ஷூ – திரைப்பட விமர்சனம்
ஷூ - திரைப்பட விமர்சனம்
'மாநாடு', 'கணம்' ஆகியவற்றைத் தொடர்ந்து மற்றும் ஒரு டைம் மிஷின் கதை...
நாயகன் திலீபன் டைம் மிஷின் ஒன்றை உருவாக்குகிறார். அதைத் தன் ஷூவில் பொருத்திக் கொண்டு போகும்போது போலீசார் அவரை மடக்குகின்றனர். அவர்களிடமிருந்து தப்பிக்க ஷூவை அடர்ந்த புதர் பகுதியில் ஒளிய வைக்கிறார்.
போலீசாரிடமிருந்து தப்ப முயலும்போது எங்கிருந்தோ வந்த துப்பாக்கி குண்டு அவரது கழுத்தில் பாய்கிறது. போலீசாரே ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்கின்றனர்.
புதிரில் மறைத்து வைக்கப்பட்ட ஷூ ப்ரியா என்ற சிறுமியிடம் வந்து பின்னர் 'தமாஷ் ரெளடி' யோகிபாபுவிடம் வந்து சேர்கிறது.
அந்த ஷூவை அணிந்த அடுத்த நிமிடமே யோகிபாபுவின் வாழ்க்கையே மாறிவிடுகிறது. தமாஷ் ரெளடியாக இருந்த யோகி பாபு சீரீியஸ் ரெளடியாகிறார். அவரது செல்வாக்கு உயர்ந்து ஏராளமான பணமும் வந்து சேர்கிறது.
ப்ரியாவின் தந்தை செருப்பு தைக்கும் ...
