சூறாவளியில் படமாக்கப்பட்ட ‘மாறா’!
ரா. மாதவன் & ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள மாறா கேரளாவின் கரையோரப் பகுதிகளில் எதிர்பாராத மழை மற்றும் சூறாவளிகளுக்கு இடையே படம்பிடிக்கப்பட்டது உங்களுக்குத் தெரியுமா?
அமேசான் பிரைம் வீடியோவின் விரைவில் வெளியாகவுள்ள, இசையும் காதலும் வழிந்தோடும் தமிழ்திரைப்படமான மாறாவில் பல்துறை வித்தகி நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்துடன், அனைவராலும் மிகவும் விரும்பப்படும் ஒரு ‘லவ்வர் பாய்’ கதாபாத்திரத்தில், ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிறச்செய்யும் ரா. மாதவன் நடித்துள்ளார். அவரது மறு திரை வருகையைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அறிமுக இயக்குனர் திலீப் குமார் இயக்கியுள்ள இப்படத்தின் டிரெய்லர் பார்வையாளர்களை ஒரு இதயப்பூர்வமான பயணத்திற்கு அழைத்துச்செல்வதை அதன் கதையோட்டம் வெளிப்படுத்தியுள்ளது. இந்த டிரெய்லர் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே பல லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. படப்பிடிப்பின் போது நடந்த சில ...
