‘ஷாட் பூட் த்ரீ ‘ படத்துக்கு சிறந்த திரைப்படத்திற்கான விருது !
தென் கொரியாவின் சியோலில் அருணாச்சலம் வைத்யநாதனின் ‘ஷாட் பூட் த்ரீ ‘ க்கு சிறந்த திரைப்படத்திற்கான விருது !
தென்னிந்திய படங்கள் பான்-இந்திய சந்தையை உலுக்கி கொண்டிருக்கும் நேரத்தில், தற்போது தயாரிப்பு முடிந்த தமிழ்த் திரைப்படமான "ஷாட் பூட் த்ரீ" ICAFF, சியோல், தென் கொரியாவில் ஐ.சி.ஏ.எஃப். எஃப் திரைப்பட விழாவின் சிறந்த விருதை வென்றது. தென் கொரியபப் படங்களுக்கு தமிழகத்தில் அதிக ரசிகர்கள் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவர்களின் சில படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளன, இது நாம் கொடுத்த ஆதரவிற்கு, அவர்கள் கொடுத்த பரிசு போலுள்ளது!
தென் கொரியா, உலகின் ‘செல்லப்பிராணிகளின் தலைநகரம் ‘என்று சொன்னால் அது மிகையாகாது. ஐ.சி,.ஏ. எஃப் .எஃப் (ICAFF) தென்கொரியாவில் துணை விலங்குகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் திரைப்பட திருவிழாவாகும். 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திரைப்பட விழாவில், முதன் முறை...
