Wednesday, October 28

Tag: Showing Business

படத் தயாரிப்பில் இறங்கும் எஸ்.எஸ்.ராஜமௌலியின் மகன் எஸ்.எஸ்.கார்த்திகேயா!

படத் தயாரிப்பில் இறங்கும் எஸ்.எஸ்.ராஜமௌலியின் மகன் எஸ்.எஸ்.கார்த்திகேயா!

News
புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான ஆர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் எஸ்.எஸ்.கார்த்திகேயா ஆகியோர், ஃபஹத் பாசிலுடன் 2 சுவாரஸ்யமான திரைப்படங்களில் இணைந்துள்ளனர்! முன்னணி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் மகன் எஸ்.எஸ்.கார்த்திகேயா, மலையாளப் படமான பிரேமலு படத்தினை தெலுங்கு ரசிகர்களுக்கு தெலுங்கு மொழியில் வெளியிட்டதன் மூலம் திரைப்பட விநியோகத் துறையில் அடியெடுத்து வைத்துள்ளார். தெலுங்கில் ஷோயிங் பிசினஸ் (Showing Business) பேனரின் கீழ் இப்படத்தை விநியோகித்தார். எஸ்.எஸ்.கார்த்திகேயாவின் முதல் வெளியீடே தெலுங்கு பதிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படம் திரையரங்குகளில் மக்கள் பேராதரவுடன் ஒவ்வொரு நாளும் பெரும் வசூலை குவித்து வருகிறது. பிரேமலுவின் பிளாக்பஸ்டர் வெற்றியால் பெற்ற நம்பிக்கையால் உற்சாகமடைந்துள்ள எஸ்.எஸ்.கார்த்திகேயா அடுத்ததாக படத் தயாரிப்பில் இறங்குகிறார், மேலும் இந்தியாவின் பெருமைமிக்க,...