தனுஷுக்கும் தடையா?
கடந்த 21.06.2024 அன்று திரு.முரளிராமசாமி அவர்கள் மற்றும் திரு.கதிரேசன் அவர்கள் தலைமையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் குழுவிற்கும் திரு.நாசர் மற்றும் திரு.பூச்சி S.முருகன் அவர்கள் தலைமையில் தென்னிந்திய நடிகர் சங்கம் நிர்வாகிகள் குழுவிற்கும் இடையே நிகழ்ந்த கலந்துரையாடலின் தீர்மானங்கள் கீழ்வருமாறு :
1) 2007- ஆம் ஆண்டு இரு சங்கங்களுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தற்கால சூழலுக்கு ஏற்ப சில மாற்றங்கள் மட்டுமே செய்து அதை இயன்ற விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
2) 21.06.2024 வரையிலான இருதரப்பு புகார்கள் மீதும் விசாரணை நடந்து தீர்வு காணப்பட்ட நிலையில், அன்றைய தினம் அளிக்கப்பட்ட புதிய புகார்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தென்னிந்திய நடிகர் சங்கம் ஒப்புக்கொண்டது. அதற்குரிய அவண ஆதாரங்களை விரைவில் வழங்குவதாக தயாரிப்பாளர்கள் சங்கம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது....
