குறும்படப் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு உடனே கிடைத்த சினிமா வாய்ப்பு!
சினிமாவை நம்பியவர்களை அது கைவிடாது. சினிமாவை நம்பினார் கைவிடப் படார் என்று சீகர் குழுமத்தின் தேசிய குறும்பட விழாவில் இயக்குநர் நடிகர்பாண்டியராஜன் பேசினார்.
இது பற்றிய விவரம் வருமாறு:
குறும்பட முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையிலும் புதிய படைப்பாளிகளை வரவேற்கும் விதத்திலும் 'சீகர் தேசிய குறும்பட விழா 2020 ' ஏற்பாடு செய்யப்பட்டு இந்த விழா அண்மையில் நடைபெற்றது .தேசிய அளவில் நடந்த இந்தப் போட்டியில் இந்தியாவின் பல்வேறு மொழிகளிலிருந்து தமிழ் , மலையாளம் ,தெலுங்கு,இந்தி, பெங்காலி போன்ற மொழிகளிலிருந்து ஏராளமான குறும்படங்கள் போட்டியில் கலந்து கொண்டன.
' நண்டூறுது ' என்கிற தமிழ்க் குறும் படம் முதல் பரிசு பெற்றது.
'டிக்கெட்' என்கிற இந்திக் குறும்படம் இரண்டாம் பரிசைப் பெற்றது .
'டெத் ஆஃபர்ஸ் லைஃப்' என்கிற மலையாளக் குறும்பட...
