அசத்தலான பாடல்கள் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பாடகர்!
7 ஸ்கிரீன் ஸ்டியோ சார்பாக லலித்குமார் தயாரிக்கும் சர்பத் படத்தில் இசை அமைப்பாளராக தனது தடத்தை அழுத்தமாக பதித்துள்ளார் இசை அமைப்பாளர் அஜீஸ். கதிர், சூரி காம்பினேஷனில் உருவாகி வரும் இப்படத்தை அறிமுக இயக்குநர் பிரபாகரன் இயக்குகிறார்.
2009 சூப்பர் சிங்கர் சீசன் 2-வில் குரலால் வசீகரித்த அஜீஸ் தற்போது சினிமாவில் இசை அமைப்பாளராக வசீகரித்து வருகிறார். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையில் குழந்தைக் குரலாக ஒலித்த இவரது குரல் அப்போதே பிரபலம். கோவா படத்தில் இவர் பாடிய இதுவரை பாடல் இதுவரைக்கும் இளைஞர்களை கவர்ந்து வருகிறது. குரலில் மெஸ்மரிசம் பண்ணும் அஜீஸ் இப்போது தன் இசை விரலாலும் கலக்கி வருகிறார். விரைவில் வெளியாக இருக்கிற சர்பத் படத்தில் 5 பாடல்களை மிகச் சிறப்பாக உருவாக்கி இருக்கிறார். வெளியாகும் முன்பே சர்பத் படத்தின் பாடல்கள் மீது பெரிய நம்பிக்கை கொண்டுள்ள அஜீஸ், "இச...
