பாடகர் க்ரிஷ்ஷின் முருகனின் ஆறுபடை பற்றிய ஆல்பம்!
அழகும், அமைதியுமான “வெற்றி வேலா” முருகனின் ஆறுபடை பற்றிய ஆல்பம். இசையமைப்பாளர், பாடகர் க்ரிஷ்ஷின் புதிய ஆல்பம்!
முருகனை போற்றும் விதமாக, ஆக்ரோஷம் கொண்ட முருகனை விடுத்து, அமைதியும் அழகும் நிறைந்த பார்வையில், முருக கடவுளின் ஆறுபடை வீடுகளை மையப்படுத்திய, ஆறு பாடல்கள் கொண்ட ஆல்பத்தை உருவாக்கியுள்ளார், பிரபல பாடகர், இசையமைப்பாளர் க்ரிஷ். இந்த இசை ஆல்பத்தினை இந்தியாவின் மிகப்பெரும் ஆடியோ நிறுவனமான சோனி மியூசிக் இந்தியா நிறுவனம் வெளியிடுகிறது.
“வெற்றி வேலா” ஆல்பம் குறித்து பாடகர், இசையமைப்பாளர் க்ரிஷ் கூறியதாவது...
சமீப காலமாக முருகர் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளார். பல்லாண்டுகளாக முருகர் பாடல்கள் பலவற்றை நாம் கேட்டு வருகிறோம். ஆனால் அதில் முருக கடவுள் அதிகமான ஆக்ரோஷம் கொண்டவராக காட்டப்படுவதாக எனக்கு தோன்றியது. முருகு என்றாலே அழகு என்று தான் அர்த்தம். முருக கடவுள் எப்போதும் அமைதியும் அழ...
