‘காண்டு கண்ணம்மா’ சிங்கிள் ட்ராக்!
சோனி மியூசிக் பிரம்மாண்டமாக ஒரு சிங்கிள் ட்ராக் ஒன்றை வெளியிடுகிறது. தமிழ்சினிமாவின் இளம் இசை அமைப்பாளர்கள் விவேக் மெர்வின் இசை அமைத்து பாடியுள்ள 'காண்டு கண்ணம்மா' எனும் பாடல் வெளிவருவதையொட்டி பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர்கள் கலகலப்பாக பேசினார்கள்,
விவேக் மெர்வின்: பேசியதாவது ,
"ஸ்கூல் டேஸில் இருந்தே நாங்கள் ஒன்றாக இசையில் பயணித்து வருகிறோம். ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு கான்செப்ட். பட்டாஸ் ஒரு ஜானர். டோரா ஒரு ஜானர், குலேபகாவலி ஒரு ஜானர். பட்டாஸ் படத்தின் பின்னணி இசையை பத்து நாட்களில் செய்தோம். ரெண்டுபேருமே லைவ் இண்ட்ஸ்ருமெண்ட்ஸ் யூஸ் பண்ண வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். பட்டாஸ் படத்தில் 25 பேரை வயலின்க்கு மட்டுமே யூஸ் பண்ணோம்.
விஸ்வநாதன் ராமமூர்த்தி என இரட்டை ஜாம்பவான்களோடு எங்களை ஒப்பிடும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு..அதே டைம் ரொம்ப பொறுப்பாக இருக்க வேண்டும் என்ற பயமும் இ...
