அமெரிக்காவிலும் புதிய வசூல் சாதனைகளைப் படைக்கும் ‘சீதா ராமம்’
துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாக்கூர் ஆகியோரின் காவிய காதல் கதையான ‘சீதா ராமம்’ அமெரிக்க பாக்ஸ் ஆபீசில் புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. இந்தத் திரைப்படம் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற முன்பதிவுடன் ஒரு மில்லியன் டாலர்களை வசூலித்து, புதிய வசூல் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.
உலகம் முழுவதிலும் உள்ள பார்வையாளர்களின் இதயங்களை வென்ற ‘சீதா ராமம்’ வெளியான முதல் வாரத்தில் இந்திய மற்றும் வெளிநாடுகளில் சிறப்பான வசூல் சாதனையை பதிவு செய்திருக்கிறது. புதிய திரைப்படங்களின் வெளியீடுகள் இருப்பினும், ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், கேரளம் என அனைத்து பகுதிகளிலும் இரண்டாவது வாரத்திலும் சிறப்பான வசூலை ஈட்டி வருகிறது. மேலும் சுதந்திர தின விடுமுறையான இன்றும் இப்படத்தில் வசூல் வேட்டை தொடரும் என திரையுலக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள். ஒரு தரமான படைப்பிற்கு, மக்களின் ஆதரவு என்றென்றும் உண்டு என்பது, ‘சீதா ராமம்’ படத்...
