Tuesday, September 1

Tag: siva

விஸ்வாசம் படம் குறித்து இயக்குநர் சிவா…

விஸ்வாசம் படம் குறித்து இயக்குநர் சிவா…

News
விஸ்வாசம் என்ற தலைப்புக்கு ஏற்ற வகையில், அஜித்குமார் மற்றும் இயக்குநர் சிவாவின் பந்தம் பல ஆண்டுகளாக விசுவாசமாக உள்ளது. உண்மையில், இவர்கள் இருவரும் இணையும்போது, நேர்மறை அதிர்வுகள் உணரப்படும். பாடல்களும் டிரெய்லரும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. ஆனாலும், 10ஆம் தேதி படம் ரிலீஸ் என்ற எந்த பதட்டமும் இல்லாமல், சிவா இன்னும் அமைதியாகவும், தன்னம்பிகையுடனும் இருக்கிறார்.   விஸ்வாசம் எப்படி தொடங்கப்பட்டது என அவர் கூறும்போது, "நாங்கள் ஒரு புதிய படத்தில் வேலை செய்யத் தீர்மானித்த உடனேயே, விஸ்வாசம் ஸ்கிரிப்ட்டை அஜித் சார்க்கு நான் விளக்கினேன்.  அவருடைய ரியாக்‌ஷன் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எந்த ஒரு கதை கேட்கும்போதும் அவர் இந்த அளவுக்கு ரசித்து சிரித்ததை நான் பார்த்ததில்லை. உண்மையில், இது போன்ற ஒரு பொழுதுபோக்கு ஸ்கிரிப்ட் எனக்கு வந்து நீண்ட காலம் ஆகிறது என்று என்னிடம் கூறினார். குறிப்பிடத்த...
“விஸ்வாசம்” பட சண்டை காட்சிகளில் எமோஷன் இருக்கும் – திலிப் சுப்புராயன்

“விஸ்வாசம்” பட சண்டை காட்சிகளில் எமோஷன் இருக்கும் – திலிப் சுப்புராயன்

News
படத்தில் ஒவ்வொரு சண்டைக்காட்சியும் ஒவ்வொரு கான்செப்டில் இருந்ததால், எங்களுக்கு சவால்களை விட, நிறைய பொறுப்புகள் இருந்தன. உண்மையில், ஒவ்வொரு சண்டைக்காட்சியும் கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி செல்லும் ஒரு புள்ளியாக இருக்கும். எனவே அதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது. ஸ்கிரிப்ட் எழுதும்போதே, என்ன தேவை என்பதில் சிவா மிகவும் தெளிவாக இருந்ததால் எங்களின் வேலை மேலும் எளிதானது, அவருக்கு நன்றி. இந்த படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளில் நிறைய புதுமை இருக்கும்" என்று கண்கள் விரிய மகிழ்ச்சியுடன் பேச ஆரம்பிக்கிறார் சண்டைப்பயிற்சியாளர் திலீப் சுப்பராயன்.   அஜித்குமார் பற்றி அவர் பேசும்போது, "அஜித் சார் மிகவும் கண்ணியமான, எளிமையான நபர். ஒவ்வொரு சண்டைக்கலைஞரையும் அவர் மதிக்கும் விதம் அவர்களுக்கு மிகப்பெரிய வியப்பாக இருந்தது. தொழில் என்று வந்து விட்டால் அவர் ஒருபோதும...