மதுரையின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகும் திரைப்படம்!
"சிவோம் Productions நிறுவனத்தின் முதல் படைப்பு" - பூஜையுடன் இனிதே துவக்கம்.!
Dr.S.கேதார்நாத் அவர்களின் "சிவோம் Productions" தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படம் தற்போது பூஜையுடன் தொடங்கியுள்ளது. பெண்களுடைய வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் திரு. முருகானந்தம் அவர்களின் உதவி இயக்குனர் திரு.சந்தோஷ் பிரபாகரன் இயக்கவுள்ளார்.
கதையின் நாயகர்களாக இல்லாமல் முக்கிய கதாபாத்திரங்களாக நான்கு நாயகர்கள் களமிறங்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கதையின் களம் நாயகன் மற்றும் நாயகியை சார்ந்து இல்லாமல் கதாபாத்திரங்களின் வாழ்க்கையை மற்றும் மதுரையின் வாழ்வியலை மையப்படுத்தியும், பெண்கள் புரியும் சமூக சீர்திருத்ததை மையப்படுத்தியுமே உருவாக்கப்பட்டுள்ளது.
கதையின் நாயகியாக கன்னிகா களமிறங்குகிறார். இவர் ஏற்கனவே பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கத...
