சிவகார்த்திகேயன் நடிக்கும் இரு மொழிப்படம்!
Suresh Productions-Sree Venkateswara Cinemas LLP-Shanthi Talkies வழங்கும்,
ப்ளாக்பஸ்டர் ஹிட் “ஜதி ரத்னதாலு” புகழ் அனுதீப் KV இயக்கத்தில்,
இசையமைப்பாளர் தமன் இசையில்,
சிவகார்த்திகேயன் நடிப்பில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் “SK 20” படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் இன்று இனிதே துவங்கியது !
2022 புத்தாண்டு கொண்டாட்டமாக சிவகார்த்திகேயனின் புதிய படம் ‘SK 20’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து படக்குழு இன்று (பிப்ரவரி 10, 2022) இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளது. காரைக்குடி மற்றும் பாண்டிச்சேரியில் ஒரே கட்டமாக படமாக்கப்படவுள்ளது. இந்த படப்பிடிப்பில் நடிகர் சத்யராஜ் முதலாக முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள்.
தற்போதைக்கு ‘SK 20’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமான 'ஜதி ரத்னதாலு' படம் மூலம் புக...
