சின்னத்திரை நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு பரிசு வழங்கும் விழா!
சின்னத்திரை நடிகர் சங்கத்தின் சார்பில் உறுப்பினர்களுக்கு புத்தாண்டுப் பரிசுகள் , புத்தாடை, இனிப்புகள் வழங்கும் விழா இன்று சின்னத்திரை நடிகர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.இவ்விழாவில் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் இயக்குநருமான மனோபாலா கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
இந்த விழா குறித்து சின்னத்திரை நடிகர்கள சங்கத்தின் தலைவர் ஏ. ரவிவர்மா பேசும்போது,
"சின்னத்திரை நடிகர் சங்கத்தின் 16 ஆண்டுகால வரலாற்றில் உறுப்பினர்களுக்கு பரிசுகள் வழங்குவது இதுவே முதல் முறையாகும் . இதற்கு மனமுவந்து பங்களிப்பு செய்த சங்கத்தின் உறுப்பினர்கள் எம்.பி .பாலாஜி மற்றும் சி. ஈஸ்வரன் இருவருக்கும் சங்கத்தின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
நமக்கு நாமே உதவி செய்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தில் சங்க உறுப்பினர்களே மற்ற உறுப்பினர்களுக்கு பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்து ...
