Friday, October 23

Tag: Soorarai Pottru

கோல்டன் க்ளோப் விருதுக்குப் போட்டியிடும் ‘சூரரைப் போற்று’!

கோல்டன் க்ளோப் விருதுக்குப் போட்டியிடும் ‘சூரரைப் போற்று’!

News
   பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், தனது தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் சார்பாக நடிகர் சூர்யா தயாரித்து நாயகனாக நடித்த தமிழ் திரைப்படமான சூரரைப் போற்று, 2020ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று. இந்திய ராணுவத்தில் கேப்டன் பதவியில் இருந்தவரும், ஏர்டெக்கான் நிறுவனத்தின் நிறுவனருமான கேப்டன் ஜி.ஆர் கோபின்நாத்தின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தியாவின் ஏழை வர்க்க மக்களுக்கு விமானப் பயணத்தை சாத்தியப்படுத்திய குறைந்த விலை விமான சேவையை ஏர் டெக்கான் தந்தது. மேலும் ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியான முதல் உயர் சிந்தனை திரைப்படம் சூரரைப் போற்று. நவம்பர் 12, 2020 அன்று அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியான இந்தப் படம் உலகம் முழுவதிலிமிருக்கும் தமிழ் பேசும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் ...

‘சூரரைப் போற்று’ படத்தின் அசாத்திய சாதனை:கூகுள் தேடல், ட்விட்டர் ட்ரெண்டிங்!

News
'சூரரைப் போற்று' படத்தின் அசாத்திய சாதனை:கூகுள் தேடல், ட்விட்டர் ட்ரெண்டிங் ஒரு படம் மக்களை எந்தளவுக்குச் சென்று அடைந்துள்ளது என்பதைப் பல வழிகளில் தெரிந்து கொள்ளலாம். மக்களிடையே அந்தப் படம் ஏற்படுத்திய தாக்கம், நடிகரின் நடிப்பு ஏற்படுத்திய பிரமிப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் சமூக வலைதளத்தில் எதிரொலிக்கும். மேலும், பலரும் ஒரு படத்தைப் பற்றிப் பேசும் போது "அப்படி என்ன இந்தப் படத்தில் இருக்கும்" என்கிற ஆர்வத்தைப் பார்க்கத் தூண்டும். இப்படி அனைத்து வழிகளிலும் 'சூரரைப் போற்று' திரைப்படம் ஒரு அசாத்திய சாதனையை நிகழ்த்தியுள்ளது. சுதா கொங்கரா துல்லியமான இயக்கத்தில், சூர்யாவின் பிரமிப்பூட்டும் நடிப்பில், ஜி.வி.பிரகாஷின் சிலிர்ப்பூட்டும் இசையில் வெளியான படம் 'சூரரைப் போற்று'. 2டி நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரித்திருந்தது. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட நாடுகளில் நவம்பர் 12...
‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை ஏன் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்?

‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை ஏன் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்?

News
அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் சூரரைப் போற்று திரைப்படத்தைப் பார்க்க ஆர்வத்துடன் இருக்கிறீர்களா? உங்கள் ஆர்வத்தைப் பேரார்வமாக்க இதோ நான்கு காரணங்கள் இந்த நான்கு காரணங்கள், அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் சூரரைப் போற்று படத்தை ஆர்வத்துடன் எதிர்நோக்க வைக்கிறது. ஒவ்வொரு புது அறிவிப்பின் மூலம் அமேசான் ப்ரைம் வீடியோவின் அடுத்த திரைப்படமான சூரரைப் போற்று ரசிகர்களிடம் ஆர்வத்தைத் தூண்டி வருகிறது. அதிகம் எதிர்பார்க்கப்படும், சுவாரசியங்கள் நிறைந்த இந்தத் திரைப்படத்தில் சூர்யா நாயகனாக நடிக்கிறார். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தக் கதை எழுதப்பட்டுள்ளது. தங்களது சீட் பெல்டினை அணிந்து கொண்டு, ஒவ்வொரு ரசிகர்களும், அழகாகக் கோர்க்கப்பட்டுள்ள இந்தக் கதையை அனுபவிக்கக் காத்திருக்கின்றனர். சூர்யா, மோகன் பாபு, பரேஷ் ராவல், அபர்ணா பாலமுரளி ஆகியோர் இதில் நடித்திருக்கின்றனர். குறைந்த விலை விமான சேவையான ஏர் ...
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 9 திரைப்படங்களை அமேசான் திரையிடுகிறது!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 9 திரைப்படங்களை அமேசான் திரையிடுகிறது!

News
  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 9 திரைப்படங்களை 5 இந்திய மொழிகளில் அமேசான் ப்ரைம் வீடியோ நேரடியாக டிஜிட்டல் தளத்தில் திரையிடுகிறது. முந்தைய உலகளாவிய பிரீமியர்களின் வெற்றியைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. இந்த புதிய அறிவிப்பில் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட 5 இந்திய மொழிகளில் 9 அற்புதமான படங்கள் உள்ளன. அமேசான் ப்ரைம் வீடியோ மொத்தமாக நேரடி-டிஜிட்டல் சேவையில் 19 அற்புதமான திரைப்படங்களுக்கு வழங்க இருக்கிறது. வருண் தவான் மற்றும் சாரா அலி கான் நடித்த கூலி நம்பர் 1, ராஜ்குமார் ராவ் நடித்த சலாங், பூமி பெட்னேக்கரின் துர்காவதி, ஆனந்த் தேவரகொண்ட நடித்த மிடில் கிளாஸ் மெலடிஸ் (தெலுங்கு), மாதவன் நடித்த மாரா (தமிழ்), பீமா சேனா நளமகாராஜா மற்றும் ஹலால் லவ் ஸ்டோரி (மலையாளம்), இந்த படங்கள் 2020 அக்டோபர் 15 முதல் அமேசான் ப்ரைம் வீடியோவில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில...
சூரியா பிறந்தநாளில் ஒரு நிமிட ஸ்பெஷல் வீடியோ!

சூரியா பிறந்தநாளில் ஒரு நிமிட ஸ்பெஷல் வீடியோ!

News
தங்கள் அபிமான நடிகர் சூர்யாவைப் போலவே அவரது ரசிகர்களும் சமூகச் செயல்பாடுகளில் கவனம் செலுத்துபவர்கள். இந்த கொரோனா முடக்க காலத்திலும் சூர்யாவின் ரசிகர்கள் சலசலப்பு இன்றி விளம்பர ஆரவாரமின்றி காரியங்களை நிறைவேற்றி வருகிறார்கள். தொடர்ந்து கொண்டிருக்கிற கொரோனாவின் அசாதாரண பொதுமுடக்க காலம் ஜூலை 23தேதி அன்று   115 வது நாளாகிறது. இத்தனை நாட்களிலும் சூர்யா ரசிகர் மன்றத்தின் ரசிகர்கள் தமிழ்நாடு முழுக்க அனாதைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் உணவு அளித்து வருகிறார்கள். அதுவும் ஓசைப்படாமல். தங்கள் நட்சத்திர நடிகர் சூர்யாவின் 45 வது பிறந்தநாள் ஜூலை 23ல் வருகிறது .அதற்கு தங்களது தொண்டின் மூலமும் சேவை மூலமும் அசத்த வேண்டும் என்று கருதி அவர்கள் திட்டமிட்டுள்ளார்கள். அதன்படி ஜூலை 23 , சென்னையில் 45 ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உணவு வழங்குகிறார்கள். மற்றும் தமிழ்நாடு முழுவதிலும் வழக்கமாக உணவு வழங்கப்படுகிறது. இ...