கில்ட் பிரச்சினைகள் குறித்து தலைவர் ஜாக்குவார் தங்கம் அறிக்கை!
கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் சங்கத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக சில பிரச்சினைகள் சென்றுகொண்டு இருக்கிறது. இதுகுறித்து சந்தா கட்டாத ஒரு சில உறுப்பினர்கள் என்னை பற்றி தவறாக சொல்லி வருகின்றனர். கடந்த 2015ல் நான் கில்ட் செயலாளராக பொறுப்பேற்றேன். அப்போது சங்கத்தில் சில ஆயிரங்கள்தான் இருந்தது. 2018ல் தலைவரான பின்பு இன்று ரூ.6.50 கோடி உள்ளது. கில்ட் மூலம் நிறைய உதவிகள் செய்து வந்தோம். கில்ட் தற்போது நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. இதற்கு நான் மிகவும் கஷ்டப்பட்டேன். மேலும் உறுப்பினர்கள் மற்றும் சில நிர்வாகிகள் உதவியுடன் இவ்வளவு தூரம் வளர்ந்துள்ளது.
கடந்த 2018ல் நடந்த தேர்தலில் நான் தலைவராக தேர்வு செய்யப்பட்டேன். எனது அணியில் சிலரும் எதிர் அணியில் சிலரு...

