“தசரா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
நானி, ஶ்ரீகாந்த் ஒடெலா, SLVC உடைய புதுமையான படைப்பான “தசரா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிறு முன்னோட்ட காணொளி வெளியாகியுள்ளது!
நேச்சுரல் ஸ்டார் நானி தொடர்ந்து வித்தியாசமான களங்களில், தரமான வகையிலான படங்களை மட்டுமே தற்போது செய்து வருகிறார். அந்த வகையில் நேர்த்தியான ஆக்சன் மற்றும் மாஸ் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ‘தசரா’ அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒடெலா இயக்கத்தில் உருவாகி வருகிறது. இத்திரைப்படம் நடிகர் நானியின் முதல் பன்மொழி இந்திய திரைப்படமாக தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.
ஶ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்ட படைப்பாக இப்படத்தை தயாரித்து வருகிறார். தேசிய விருது வென்ற நாயகி கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும்...
