இசை பிரியர்களை ஈர்க்கும் எஸ்.பிரதீப் வர்மாவின் புதிய இசை ஆல்பம்!
இசை பிரியர்களை ஈர்க்கும் இசையமைப்பாளர் எஸ்.பிரதீப் வர்மாவின் புதிய இசை ஆல்பம்!
கொரோனா ஊரடங்கினால் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கும் மக்களின் மனங்களில் புதிய புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலான புதிய இசை ஆல்பம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. “காதலை காதலிப்போம்...” என்று தொடங்கும் இந்த பாடலை ‘ஓட்டம்’ படத்தின் ஹீரோவும், இசையமைப்பாளருமான எஸ்.பிரதீப் வர்மாவும், இயக்குநர் எம்.முருகனும் இணைந்து உருவாக்கியுள்ளார்கள்.
தனி இசை ஆல்பங்களின் வருகை தமிழ் இசைத்துறையில் அதிகரித்து வரும் நிலையில், அவற்றில் இருந்து சற்று வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், இயக்குநர் எம்.முருகனின் காதல் கவிதைக்கு, ஈர்ப்பான மெட்டமைத்த எஸ்.பிரதீப் வர்மா, தனது குரல் மூலம் இசை பிரியர்கள் ரசிக்கும் இனிமையான பாடலாகவும் கொடுத்திருக்கிறார்.
இப்பாடல் குறித்து இசையமைப்பாளர் எஸ்.பிரதீப் வர்மா கூறுகையில், “நான் நிறைய...
