Thursday, October 29

Tag: spy movie

சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் பற்றிய மர்மத்தை அடிப்படையாகக் கொண்ட ‘ஸ்பை’ திரைப்படம்!

News
நடிகர் நிகில்- இயக்குநர் கேரி பி ஹெச்- Ed என்டர்டெய்ன்மென்ட்ஸ் இணைந்து வழங்கும் தேசிய அளவிலான திரில்லர் படைப்பான 'ஸ்பை' எனும் திரைப்படம், ஜூன் மாதம் 29 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் டீசர் மே மாதம் 12ஆம் தேதியன்று வெளியாகிறது. நாடு முழுவதும் மாபெரும் வெற்றியைப் பெற்ற 'கார்த்திகேயா 2' எனும் திரைப்படத்திற்கு பிறகு அப்படத்தின் நாயகனான நிகில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் தேசிய அளவிலான திரில்லர் படைப்பு 'ஸ்பை'. இந்த படைப்பு 2023 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த புலனாய்வு சார்ந்த படைப்பாக இருக்கும். நடிகர் நிகில் நடித்திருக்கும் பான் இந்திய திரைப்படமான 'ஸ்பை' படத்தின் பின்னணியைப் பற்றி தயாரிப்பாளர்கள் ஒரு சிறிய காணொளியை வெளியிட்டிருந்தனர். இதில் இந்திய நாட்டின் சிறந்த ரகசியம் என்ன? என்பதையும், 'நீ எனக்கு ரத்தம் கொடு நான் உனக்கு சுதந்திரம் தருகிறேன்' என்ற முழக்கத...