திருநங்கைகளின் வாழ்வியல் சோகங்களைப் பேசும் “சைலண்ட்” !
வார்த்தைகளுக்கு இடையே ஏற்படும் சந்திப்பிழையை போல் வாழ்க்கையில் ஏற்பட்ட சந்ததிப் பிழைகள் இவர்கள் என்று ஒரு கவிஞர் திருநங்கைகளை பற்றி பாடியிருப்பார்.
திரைப்படங்களில் கறிவேப்பிலையை போல் பயன்படுத்தப்படும் திருநங்கைகளை பிரதான பாத்திரத்தில் நடிக்க வைத்து ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர்.
SR Dream Studios சார்பில், S.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், சமயமுரளி திரைக்கதை வசனத்தில் இன்று தமிழகமெங்கும் வெளியாகியிருக்கும் திரைப்படம் சைலண்ட்.
முழுக்க புதுமுகங்கள் பணியாற்றியிருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் விருந்து தருகிறது.
ஒரு பெண் கொலையில் படம் ஆரம்பமாகிறது. அந்தக் கொலையை போலீஸ் விசாரிக்க ஆரம்பிக்கும் போது, மேலும் பல கொலைகள் நடக்க ஆரம்பிக்கிறது. இதில் புவனேஸ்வரி எனும் பெண் இருப்பதாக நம்புகிறது போலீஸ். ஆனால் அது புவனேஷ் எனும் ஆண் என...
