“மெட்ராஸ்காரன்” படத்திர் இடம் பெறும் “காதல் சடுகுடு” பாடல் வெளியீட்டு விழா!
SR PRODUCTIONS தயாரிப்பில், “மெட்ராஸ்காரன்" திரைப்பட இரண்டாவது சிங்கிள் "காதல் சடுகுடு" பாடல் வெளியீட்டு விழா !!*
SR PRODUCTIONS சார்பில் B.ஜகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மெட்ராஸ்காரன்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் "காதல் சடுகுடு" பாடல் வெளியீட்டு விழா, தனியார் மாலில், மக்கள் முன்னிலையில் படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, சிறப்பாக நடைபெற்றது.
ஆடல், பாடல், நடனம் மற்றும் மேஜிக் ஷோ என மக்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்ற இந்நிகழ்வினில்…
இயக்குநர் வாலி மோகன் தாஸ் பேசியதாவது…
மிக மிகச் சந்தோசமாக இருக்கிறது. படம் ஆரம்பித்து இவ்வளவு தூரம் வந்துவிட்டது. விரைவில் உங்களை மகிழ்விக்கத் திரையில் இப்படத்த...

