எஸ்.ஜெய்சங்கர் இயக்கும் ‘ஸ்ரீதேவி ஏஜ் 16’!
இதற்கு முன் முதல் படமாக, தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டியை வைத்து 'மன்னாரு', அடுத்ததாக அதிரடி எதிர்நாயகன் ஆர்.கே. சுரேஷை வைத்து 'வேட்டைநாய்' போன்ற கிராமியம் சார்ந்த நேட்டிவிட்டி படங்களை இயக்கிய எஸ்.ஜெய்சங்கர் மூன்றாவதாக முழுக்க முழுக்க நகரம் சார்ந்த கதையை எடுத்துக்கொண்டு இயக்கவிருக்கும் படம் 'ஸ்ரீதேவி ஏஜ் 16'.
இப்படத்தை VNR வழங்கும் MM கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் வேல் நாகராஜ் தயாரிக்கிறார்.படம் பற்றித் தயாரிப்பாளர் வேல் நாகராஜ் பேசும்போது,
" நான் பைனான்ஸ்,Anchor Real Estates, Anchor Treaders,போன்ற தொழில்களைச் செய்து வருகிறேன்.
'அன்பும் ஆக்கமும்' என்றொரு அறக்கட்டளை நடத்தி வருகிறோம்,இந்த அறக்கட்டளை மூலமாக பலருக்கும் உதவி செய்து வருகிறோம். கொரோனா காலத்தில் தினசரி 200 குடும்பங்களுக்கு உணவு விநியோகம் செய்து வந்தோம், தொடர்ச்சியாக 100 குடும்பங்களுக்கு வாராவாரம் அரிசி,மளிக...
