Tag: srikanth
ஸ்ரீகாந்த்-சிருஷ்டி டாங்கே நடிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர்!
வெத்துவேட்டு படத்தை இயக்கிய இயக்குநர் எஸ்.மணிபாரதி தற்போது ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் தயாரிப்பில் "தி ஜர்னி ஆஃப் பெட்" என்ற தமிழ்ப் படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். மேலும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி பப்பு, தேவிபிரியா, மலையாள நடிகை திவ்யா, ரிஷா, டிக்டாக் திருச்சி சாதனா, விக்ரம் ஆனந்த், பிரவீண் குமார், சுண்ணாம்பு செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குநர் மணிபாரதி கூறும்போது, “இது சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியுள்ள ஒரு வீக் எண்ட் மூவி. ஸ்ரீகாந்த் ஐடியில் பணிபுரியும் இளைஞராக நடித்துள்ளார். ஸ்ரீகாந்தும் அவரது நண்பர்களும் ஊட்டிக்கு ஒன்றாக பிக்னிக் செல்லும்போது நடக்கும் ஒரு கொலையும் அதைத்தொடர்ந்து அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் தான் படத்தின் கதை. சுருக்கமாகச் சொன்னால் ஒரு ...
விஜய் ஆண்டனி நடிக்கும் “காக்கி” படத்தின் உரிமைகளை கைப்பற்றிய இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ்
இயக்குனர் விஜய் மில்டன் - விஜய் ஆண்டனி கூட்டணியில் புதிய திரைப்படத்தைத் தயாரித்து வரும் இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ், அனுபவம் வாயந்த இயக்குனர்
ஏ. செந்தில்குமார் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில், உருவாகி வரும் "காக்கி" திரைப்படத்தின் உரிமைகளை வாங்கியிருக்கிறது.
விஜய் ஆன்டனி, சத்யராஜ், ஸ்ரீகாந்த், இந்துஜா, ஈஸ்வரி ராவ், ஜான் விஜய், ரவி மரியா சன் டீவி புகழ்'கதிர்,ஆகியோரை முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் "காக்கி", ஒரு பன்முகத் திறமைகள் கொண்ட பல நட்சத்திரக் கலவை.
ஜீன் மாதத்தில் துவங்கி ஏறத்தாழ 50 சதவீத படப்பிடிப்பு வேலைகள் ஷிமோகா , பெங்களூரு, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்ற முதற்கட்ட படப்பிடிப்பில் நிறைவடைந்திருக்கிறது.
இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வேலைகள் அக்டோபர் மாதத்தில் நிறைவு பெறும் என் எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் ஏ.செந்தில் குமார் இயக்கத்தில், பிரபலமான ஒளிப்பதிவாளர்...






