ஆற்றல் – திரைப்பட விமர்சனம்
ஆற்றல் - திரைப்பட விமர்சனம்
பெரும்பாலும் மிருதுவான வேடங்களிலேயே வரும் விதார்த் அதிரடி ஆக்ஷன் வேடத்தில் ஆற்றல் காட்டியிருக்கும் படம்தான் ஆற்றல்.
ஓட்டுனர் இன்றி தானே இயங்கும் கார் ஒன்றை உருவாக்கும் முயற்சில் இருக்கிறார் விதார்த். இதற்காக அவருக்கு பத்து லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது. விதார்த்தின் தந்தை சார்லி, மகனுக்காக பைனான்ஸியரிடம் பணம் கடன் வாங்கி வருகிறார். ஆனால் பணத்தை மகனிடம் கொடுப்பதற்கு முன்பே அவர் கொலை செய்யப்படுகிறார். பணமும் கொள்ளை போகிறது.
இதே சமயம் நகரில் ஆங்காங்கே முகமூடி கொள்ளை சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன. கொள்ளையடித்துவிட்டு கொலை செய்வது இந்த கொள்ளை கும்பலின் வாடிக்கை.
ஒரு நாள் கண்ணெதிரே நடுரோட்டில் முதியவர் ஒருவரைக் கொன்று அவரிடமிருந்து முகமூடி கும்பல் பணத்தை கொள்ளையடிப்பதைப் பார்க்கிறார் விதார்த். கொள்ளையர்களைத் துரத்திச் சென்று பணத்தை மீட்டு...
