ட்ரெண்ட் மியூசிக் மற்றும் ஐ.டி.சி நிமிலே இணைந்து வழங்கும் “ஸ்டே ஹோம் சங்கீதம்”!
ட்ரெண்ட் மியூசிக் மற்றும் ஐ.டி.சி நிமிலே இணைந்து வழங்கும் "ஸ்டே ஹோம் சங்கீதம்" - தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்!
இந்த ஏப்ரல் 14, 2020, தமிழ் புத்தாண்டில், தென்னிந்தியாவின் முதன்மையான டிஜிட்டல் ஏஜென்சி – ‘ட்ரெண்ட் லவுட்’ மற்றும் அதன் பிரபல ஆடியோ லேபிள் ‘ட்ரெண்ட் மியூசிக்’ மற்றும் ஐ.டி.சி நிமிலே - வேம்பினால் தயாரிக்கப்பட்ட 100% இயற்கையான அதிரடியான கிளீனர், உடன் இணைந்து நீங்கள் வீட்டிலிருந்தே ரசிக்கத்தக்க ஒரு இசை விருந்தை வழங்குகிறது. இந்நிகழ்ச்சி, ட்ரெண்ட் மியூசிக் யூடியூப் மற்றும் ட்ரெண்ட் மியூசிக் சவுத் முகநூல் பக்கத்தில் ஒளிபரப்பாகவிருப்பதால், வீட்டில் இருந்தபடியே, பாதுகாப்பாக இந்த இனிமையான இசையை அனைவரும் கேட்டு ரசிக்க முடியும்.
இந்த முயற்சி ‘ஸ்டே ஹோம் சங்கீதம்’ – என இதுவரை யாரும் முயற்சிக்காத வகையில் பாரம்பரிய கர்நாடக இசை மற்றும் திரைப்பட இசையை இணைத்து பிரத்யேகமாக டிஜிட்டல் தளத்தில் ...
