வித்தியாசமான திரில்லர் டிராமா “மனிதர்கள்”!
வித்தியாசமான திரில்லர் டிராமா “மனிதர்கள்” மே 30 முதல் திரையரங்குகளில் !
Studio Moving Turtle மற்றும் Sri Krish Pictures தயாரிப்பில், அறிமுக இயக்குநர் இராம் இந்திரா இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், மனித குணத்தின் விசித்திரங்களைச் சொல்லும், திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “மனிதர்கள்” திரைப்படம், வரும் மே 30 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டிரெய்லர், திரை ஆர்வலர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, திரைப் படைப்பாளிகள் மத்தியில் பெரும் பாராட்டுக்களைக் குவித்துள்ளது.
இப்படத்தின் டிரெய்லரைப் பார்த்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெகு சுவாரஸ்யமான டிரெய்லர், படத்திற்காக காத்திருக்கிறேன் எனக் கூறியதோடு, தனது சமூக வலைத்தள பக்கத்திலும் படத்தின் டிரெய்லரைப் பகிர்ந்துள்ளார்.
புகழ் ...
