Tuesday, September 1

Tag: Stunt Silva

‘காதல் சைக்கோ’ பாடல் மூலம் கவனம் ஈர்த்த அனிருத்!

‘காதல் சைக்கோ’ பாடல் மூலம் கவனம் ஈர்த்த அனிருத்!

News
அனிருத் ரவிச்சந்தர் தனது இசை மூலம் மட்டுமல்லாமல், அவரது குரலாலும் ரசிகர்கள் கூட்டத்தை கவர்வதில் மிகவும் சிறப்பானவர். இது ஒரு தனித்துவமான சாராம்சமாக பாராட்டப்பட்டது, அவரது இசையில் வெளியாகி பல ஆண்டுகளுக்கு பிறகும் பாலிவுட்டில் மிகவும் பிரபலமாக இருக்கும் காதல் பாடல்களில் ஒன்றான 'துஹிரே’ (டேவிட்) மூலம் முந்தைய சாதனையான உலகப் புகழ்பெற்ற ‘கொலவெறி’ பாடலின் சாதனையை முறிடித்தார். அவரது குரல் மொழி தடைகளைத் தாண்டி அபரிமிதமான ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போது, பிரபாஸ், ஸ்ரத்தா கபூர் நடித்துள்ள ‘சாஹோ’ படத்தில் அனிருத் பாடிய ‘காதல் சைக்கோ’ பாடல் மூலம் அனைவரது கவனத்தை ஈர்த்திருப்பதால், இந்தி பேசும் பிரதேசங்களிலும் சிவப்பு கம்பள வரவேற்பு கிடைத்துள்ளது. வட இந்திய கலைஞர்களுடன் அனிருத் இணைந்த பாடல்கள் எப்போதும் மிகப்பெரிய வெற்றியையே பெற்றுள்ளன. இந்த முறை, அவர் நாட்டின் மிகவும் பிரபலமான இசைக் கலைஞர்களில் ஒரு...
ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய அருவம் டீசர்!

ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய அருவம் டீசர்!

News
சுட்டெரிக்கும் வெயில் நம்மை வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில் நம்மை குளிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது சில விஷயங்கள். இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்ட, சித்தார்த், கேதரின் தெரஸாவின் "அருவம்" படத்தின் டீசருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளது. திகில் மற்றும் பேய் படங்களின் சீசன் இது. ஆனால் இந்த படத்தின் குறுகிய மற்றும் சிறப்பான டீசர் அனைத்து அம்சங்களிலும் இது மிகவும் தனித்துவமான ஒரு படம் என்பதை உறுதிபடுத்துகிறது. உண்மையில், இந்த படம் எதை பற்றியது என்பதை அறிந்து கொள்ளும் ஒரு உடனடி உற்சாகத்தை உருவாக்கியிருக்கிறது.  இயக்குனர் சாய்சேகர் இது பற்றி கூறும்போது, "இப்போதைக்கு எதை பற்றியும் பேசாமல் இருப்பது தான் ஒரே ஒரு வாய்ப்பு. எதை பற்றி சொன்னாலும் அது ஸ்பாய்லராக மாறிவிடும். திகில் படங்கள் என்பவை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டன, ஆனால் 'அருவம்' இந்த வகை படங்களில...