தான் நடித்த படத்தின் புரோமோசனுக்கு வரமறுக்கும் கதாநாயகி சுபிக்ஷா!
நபீஹா மூவீஸ் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் நுபாயஸ் ரகுமான் தயாரித்துள்ள படத்திற்கு கவித்துவமாக " சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை " என்று பெயர் வைத்துள்ளனர்.
நாயகனாக ருத்ரா நடித்துள்ளார். மற்றும் சுபலக்ஷ்மி, ராட்சசன் வினோத் சாகர், கணபதி, பீட்டர் ஹார்ட்லி, மகேஷ் பத்மநாபன், சுனந்தா ஆகியோர் நடித்துள்ளனர்.
கதாநாயகிகள் நடிக்க ஒப்பந்தம் செய்யும்போது அக்ரிமெண்டில் பட புரோமோஷன்களுக்கு வருவோம் என்று கையெழுத்து போட்டாலும் பெரும்பாலும் அதை கடைபிடிப்பதில்லை அந்த வகையில் கடுகு படத்தில் நாயகியாக நடித்த சுபிக்ஷா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த படத்தின் இசை வெயியீட்டிற்கு வருமாறு, தயாரிப்பாளரும், இயக்குனரும், நானும் மாறி மாறி அழைத்தும் வரவில்லை, நான் வெளியூரில் படப்பிடிப்பில் இருக்கிறேன் என்று ஏமாற்றுகிறார். இதற்கிடையே இசை வெளியீடு முடிந்து தற்போது படம் வருகின்ற 31 ம் தேதி வெளியாக ...



