கருவேலம் முள்ளிலும், மணல் கல்லிலும் பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைத்தது!
தமிழ் சினிமாவுல முதன்முதலாக ஒரு படம் இயக்குகின்ற இயக்குனர்கள் எல்லோருமே ஆரம்பம் முதல் இறுதி வரை காட்சிகள் அனைத்தும் சிறப்பாக வர வேண்டும் என்று கடுமையாக உழைப்பதுண்டு.
ஏனென்றால் அறிமுக இயக்குனர்கள் அனைவருக்கும் அந்த முதல் படம் தான் அவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கின்ற படமாக திருப்புமுனையாக அவர்களது வாழ்க்கையில் அமையும்.
அப்படி தன் முதல் படமான *மதயானை கூட்டம்* படத்திலேயே மக்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்ற இயக்குனர் *விக்ரம் சுகுமாரன்* தனது இரண்டாம் படைப்பான *இராவண கோட்டம்* திரைப்படத்தை எப்படி எடுத்து இருப்பார் இதோ உதாரணம் சில படப்பிடிப்பு நிகழ்வுகள்.
பொதுவாக மாதங்கள் பன்னிரண்டில் அக்னி நட்சத்திரம் வரும் மாதமான மே மாதம் தலைநகரமான சென்னையிலும் சரி அவரவர் சொந்த ஊரிலும் சரி ஒரு இருபதிலுருந்து இருபைதைந்து நாள் கடுமையான வெயில் தாக்கத்தை சந்திக்க வேண்டும்.
ஒரு சிலர் இந்த வெயிலின் தாக்கத்தை த...
