“ஒரு வரிக் கதையைக் கேட்டு ஒப்புக் கொண்ட படம் சுல்தான்” – நடிகர் கார்த்தி
சுல்தான் திரைப்படத்தின் முன்வெளியீட்டு விழாவில் படத்தில் பங்கு பெற்ற கலைஞர்கள் பேசியவற்றின் தொகுப்பு:-
நடிகர் கார்த்தி பேசும்போது,
இவ்விழா குடும்ப விழா போன்ற உணர்வைத் தருகிறது. சொந்த பந்தம் கூட இருப்பதே பெரும் மகிழ்ச்சி என்பதை கொரோனா சொல்லிக் கொடுத்திருக்கிறது. அதேபோல், ஒரு படத்தை சுற்றியே அனைவரின் சிந்தனையும் இருந்தால், இந்த சினிமாத் துறை தோல்வியுறாது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு ஒவ்வொரு இலக்கு. அந்த நம்பிக்கை இப்படத்தின் பாத்திரங்கள் கொடுத்திருக்கிறது.
ஒரு வரியிலேயே நான் ஒப்புக் கொண்ட கதை தான் சுல்தான். அதேபோல், நான் தான் நடிக்க வேண்டும் என்று 2 வருடங்கள் பொறுமையாக காத்திருந்து இயக்கியிருக்கிறார் பாக்கியராஜ் கண்ணன். இப்படம் வெற்றிபெற்றால் பல மொழிகளிலும் மறுஉருவாக்கம் செய்யப்படும்.
ஒரு படத்திற்கு கதாநாயகன் மிகவும் முக்கியம். அதேபோல், கதாநாயகியும் முக்கியம். அதைவிட வில்லன் மிக மிக முக்...
