Thursday, September 24

Tag: Sundeep Kishen

சிம்பு தேவன் இயக்கும் கசட தபற!

சிம்பு தேவன் இயக்கும் கசட தபற!

News
வழக்கத்திற்கு மாறான முயற்சிகளை சரியான கூறுகளுடன் சேர்த்து தரப்படும்போது எப்போதுமே அது உடனடி ஈர்ப்பை பெறுகிறது. தற்போது இயக்குனர் சிம்புதேவனின் மல்ட்டி ஸ்டாரர் படமான கசட தபற, சமூக வலைத்தள பக்கங்கள், இணையதள பக்கங்கள் மற்றும் ஊடகங்களில் மிகவும் பேசப்படும் பிரபலமான விஷயமாக மாறியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் மகத்தான வரவேற்பை பெற்றிருப்பதால் ஒட்டுமொத்த குழுவும் மகிழ்ச்சியில் இருக்கிறது. இது குறித்து இயக்குனர் சிம்பு தேவன் கூறும்போது, "திறமைமிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருடன் வேலை செய்தது எனக்கு ஒரு வித்தியாசமான மற்றும் தனிப்பட்ட அனுபவமாக இருந்தது. இது சம்பிரதாய அறிக்கையாக கூட தோன்றலாம், ஆனால் இதில் உள்ள நட்சத்திர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை பார்க்கும்போது, அது நிரூபணம் ஆகிறது. ஹரீஷ் கல்யாண், சந்தீப் கிஷன், சாந்தனு பாக்யராஜ், வெங்கட் பிரபு, பிரேம...