Sunday, October 4

Tag: Sunflower

சூரியகாந்தி பூக்களோடு “பறந்து போ” படம் பார்க்க வாருங்கள்!

சூரியகாந்தி பூக்களோடு “பறந்து போ” படம் பார்க்க வாருங்கள்!

News
வணக்கம். நான் இயக்குநர் ராம். எங்களுடைய “பறந்து போ” திரைப்படம் வரும் ஜூலை 4-ஆம் தேதி வெளிவர இருக்கிறது. அதனுடைய முதல் பாடல் வெளியாகி இருக்கிறது. அதற்கு ‘Sunflower – not a single not a teaser’ என்று பெயரிட்டு இருக்கிறோம். பாடலோடு சில காட்சித் துண்டுகளும் இடம் பெறுவதால் இவ்வாறு பெயரிட்டு இருக்கிறோம். எல்லோரையும் போல் எனக்கும் சூரியகாந்தியை மிகவும் பிடிக்கும். ஒரு நல்ல சூரியோதயத்தில் சூரியகாந்தி தோட்டத்தில் படம் பிடிக்கிற ஒரு அரும் வாய்ப்பு என்னுடைய முதல் படத்தில் எனக்குக் கிடைத்தது. கற்றது தமிழின் இன்னும் ஓர் இரவு பாடலை ஆந்திர மாநிலத்து கடப்பாவின் சூரியகாந்தி தோட்டத்தில் படம் பிடித்தோம். தங்கமீன்களின், ஆனந்த யாழைப் பாடலை சூரியகாந்தி தோட்டத்தில் எடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தோம். ஆனால் சூரியகாந்தி பூக்கும் காலம் வாய்க்காததால் கேரளாவில் உள்ள அச்சன்கோவிலின் பனிபெய்யும் மலைகள் மீது ...