தும்பா படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய KJR ஸ்டுடியோஸ்!
அனிருத் ரவிச்சந்தர் மற்றும் டைக்ரஸ் தும்பா நடித்த "தும்பா" விளம்பர வீடியோ மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு லட்சக்கணக்கான பார்வைகளை தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கிறது. கோடை விடுமுறை நெருங்குவதை ஒட்டி, குழந்தைகள் மற்றும் குடும்ப பார்வையாளர்கள் ஏற்கனவே படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். தற்போது இந்த படத்தின் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு உரிமையை KJR ஸ்டுடியோஸ் கோட்டபாடி ஜே ராஜேஷ் பெற்றிருக்கிறார்.
ரீகல் ரீல்ஸ் மற்றும் ரோல் டைம் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர்கள் இது பற்றி கூறும்போது, "நாங்கள் இந்த படத்தை ஆரம்பித்தபோது, எங்கள் இயக்குனரின் திரைக்கதை மற்றும் அவரது நோக்கத்தின் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்தோம். இந்த படம் ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாக, குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் படமாக இருக்கும் என நம்பினோம். படத்தின் ஒரு சில காட்சிகளை பார்த்த கோட்டபாடி ஜே ராஜே...

