வழக்கறிஞராக சூர்யா மிளிரும் ஜெய் பீம் டீஸர் வெளியானது!
தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் பிரத்யேகமாக வெளியாகும் ஜெய் பீம்.
அதிக எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் நீதிமன்ற வழக்காடலைக் கதைக்களமாகக் கொண்ட ஜெய் பீம் திரைப்படத்தின் டீஸரை ப்ரைம் வீடியோ வெளியிட்டுள்ளது.
சூர்யா நாயகனாக நடிக்க டி ஜே ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தை சூர்யா - ஜோதிகா தம்பதியின் 2டி எண்டெர்டெய்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
வெளியாகவுள்ள நீதிமன்ற வழக்காடலைக் கதைக்களமாகக் கொண்ட ஜெய் பீம் திரைப்படத்தின் பரபரப்பான டீஸரை ப்ரைம் வீடியோ வெளியிட்டுள்ளது. சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ளனர்.
உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் தீபாவளியை முன்னிட்டு, 2 நவம்பர் 2021 அன்று ஜெய் பீம் தமிழ் மற்றும் தெலுங்கு...
