Saturday, October 24

Tag: suriya

சூர்யா தயாரிப்பில்  ஜோதிகா நடிக்கும்  “ஜாக்பாட்”

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் “ஜாக்பாட்”

News
சூர்யா ஜோதிகா ஜோடி திரையில் எப்படி வெற்றிக்கொடி நாட்டியதோ அதேபோல் சூர்யா தயாரித்து ஜோதிகா நடிக்கும் கூட்டணியும் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது.    ஏற்கெனவே சூர்யா தயாரித்து ஜோதிகா நடித்த 36 வயதினிலே, மகளிர் மட்டும் ஆகிய படங்கள் வெற்றிபெற்றுள்ளன. இப்போது 2டி எண்டெர்டெயின்மெண்ட்டில் சூர்யா தயாரிக்கும் படத்தில் ஜோதிகா  மூன்றாவது முறையாக  நடிக்கிறார். படத்தின் பெயர் “ஜாக்பாட்”.     ஜோதிகா திருமணத்திற்குப் பின் கதையின் நாயகியாக வலம் வந்த 36 வயதினிலே, நாச்சியார், மகளிர் மட்டும், காற்றின் மொழி ஆகிய படங்கள் நல்ல பெயரையும் நல்ல லாபத்தையும் சம்பாதித்து இருக்கின்றன. அந்த வரிசையில் ஜோதிகா நடித்து, நடிகர் சூர்யா தயாரிக்க, கல்யாண் இயக்கியுள்ள இந்த “ஜாக்பாட்” படமும் இணையும் என்று தெரிகிறது. சென்னையில் நடிகர் சூர்யா க்ளாப் அடித்து துவங்கி வைத்த இப்படத்தின் ...
‘சூர்யா38’ படத்தின்  பூஜை!

‘சூர்யா38’ படத்தின் பூஜை!

News
சுதா கோங்கரா இயக்கத்தில் 'சூர்யா38' படத்தின் பூஜை இன்று நடந்தது. படப்பிடிப்பு நாளை சென்னையில் துவங்குகிறது. சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் இவர்களுடன் இணைந்து, சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா எண்டர்டெயின்மெண்ட்-ன் குணீத் மோங்காவும் இணைந்து தயாரிக்கிறார். இப்படத்தின் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். நாடு முழுவதுமுள்ள திறமை வாய்ந்த நடிகர், நடிகைகளும் இப்படத்தில் பங்குபெறுகிறார்கள். படத்தின் இசை ஜி.வி.பிரகாஷ் கையாளுகிறார். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்குனராக ஜாக்கி பணியாற்றுகிறார். படத்தொகுப்பிற்கு சதீஷ் சூர்யாவும், உடைகளுக்கு பூர்ணிமா ராமசாமியும் பொறுப்பேற்றிருக்கிறார்கள். இணை தயாரிப்பு ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன்....