டொராண்டோ திரைப்பட விழாவில் கவனம் ஈர்த்த இயக்குநர் சுசி கணேசன்!
சுசி கணேசனின் “தில் ஹை கிரே", இந்தியாவின் முதல் ஆடியோ டீஸர் -TIFF 2023 -ல் கவனத்தை ஈர்த்தது!
2023 ஆம் ஆண்டு டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (TIFF) world premier - க்கு தயாராகி வருகிறது, இயக்குனர் சுசி கணேசனின் “ தில் ஹே கிரே” .
வினீத் குமார் சிங், அக்ஷய் ஓபராய் மற்றும் ஊர்வசி ரவுத்தேலா உள்ளிட்டவர்கள் நடித்திருக்கும் இந்த படம் இந்தியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு , பிரத்யேகக் காட்சியாக திரையிடப்படுகிறது .
உலகளாவிய பிரீமியருக்கு முன், முற்றிலும் புதுமையான “ஆடியோ டீஸர் “செப்டம்பர் 11 மாலை இந்திய பெவிலியன் (TIFF )-இல் இந்திய அரசு
இணைச் செயலாளர் மற்றும் எம்.டி
NFDC திரு பிரிதுல் குமார் அவர்களால் வெளியிடப்பட்டது.
பிரிதுல் குமார் பேசும்போது , “எங்களுக்கு சுமார் 65 படங்கள் தேர்வுக்கு வந்தன. வல்லுனர்களோடு படங்களைப் பார்த்தோம் .அவற்றில் இந்த ஒரு படம் எல்லா விதத்தில...


