பிரைம் வீடியோவின் ‘ஸ்வீட் காரம் காபி’ இணையத் தொடரின் இசை வெளியீடு*
ப்ரைம் வீடியோவின் அசல் தமிழ் இணைய தொடரான 'ஸ்வீட் காரம் காபி' எனும் இணைய தொடரின் இசையை வெளியிடுகிறது. இந்த இணைய தொடரின் இசை ஆல்பத்தில்11 பாடல்கள் இடம் பெற்றிருக்கிறது.
கோவிந்த் வசந்தா இசை அமைத்திருக்கும் இந்த இணைய தொடரில் ஐந்து பாடல்களும், ஆறு இசைக்கருவிகளின் இசையும் என 11 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
இயக்குநர்கள் பிஜாய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து மற்றும் சுவாதி ரகுராமன் ஆகியோரின் இயக்கத்தில் லட்சுமி, மது, சாந்தி ஆகியோர் நடித்திருக்கும் இந்த இணைய தொடர் எட்டு அத்தியாயங்களை கொண்டிருக்கிறது. இந்த பிரைம் வீடியோவின் அசல் தமிழ் தொடரான 'ஸ்வீட் காரம் காபி ' ஜூலை 6ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
மும்பை இந்தியா ஜூலை 2 2023 - இந்தியாவின் மிகவும் விரும்பி பார்க்கப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோவில் ஜூலை 6ஆம் தேதி முதல் வெளியா...
