இந்தியாவின் முதல் தேசிய அளவிலான பெண்கள் கட்சியின் கம்பீர உதயம்
ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த அரசியல் கட்சிகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படாமல் இருப்பதை உணர்ந்த மருத்துவர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் ஸ்வேதா ஷெட்டி, 36, 'தேசிய பெண்கள் கட்சி (NWP)' யைத் துவங்கி இனி வரும் தேர்தல்களில் மாற்றத்தைக் கொண்டு வர விரும்புகிறார்.
முழுவதும் பெண்களை மையப் படுத்தி, பெண்களுக்காகவே துவங்கப்பட்ட நாட்டின் முதல் தேசியக் கட்சியான 'தேசிய பெண்கள் கட்சி' கடந்த டிசம்பர் 18, 2018 - இல் புதுடெல்லியில் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கட்சியின் தலைமைப் பொறுப்பேற்று இருக்கும் நிறுவனர், மருத்துவர், சமூக செயற்பாட்டாளர் மற்றும் பெண்ணியவாதி ஸ்வேதா ஷெட்டி, இந்தக் கட்சி இந்தியாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க முன்னெடுப்பு. பாராளுமன்றத்தில் பெண்களுக்கு சமஉரிமை பெற்றுத் தருவதே எங்கள் பிரதான நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.
ஊடகங்களின் ஒத்துழைப்பு மற்றும் உதவியின் மூலம் நாடு முழு...
