ஒன்றிய நிதியமைச்சர் நிரமலா சீதாராமனுக்கு தயாரிப்பாளர் சங்கப் பொருளாளர் டி.ஜி.தியாகராஜன் கோரிக்கை!
நடப்பு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் சத்திய ஜோதி பிலிம்ஸ் அதிபருமான டி.ஜி.,தியாகராஜன், ஒன்றிய நிதியமைச்சர் நிரமலா சீதாராமனுக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியிருக்கிறாா். அதன் விவரம் வருமாறு:
கொரோனா பெருந்தொற்றினால் மார்ச் 2020ல் அறிவிக்கப்பட்ட முதல் பொதுமுடக்கத்திலிருந்து இந்திய திரையுலகம் ஒரு இக்கட்டான சூழ்நிலையை சந்தித்துக்கொண்டிருக்கிறது. அதுமுதல் அக்டோபர் 2020 வரையிலும், அதற்குபின் 50% இருக்கைகளுக்கு மட்டுமே திரையரங்குகளில் அனுமதி வழங்கப்பட்டபின்னும், மக்கள் திரையரங்குகளுக்கு வர விருப்பம் காட்டவில்லை. இந்நிலையில் ஜனவரி 2021 முதல் திரைத்துறை மெல்ல மெல்ல மீண்டெழுந்துகொண்டிருந்த சூழ்நிலையில், ஏப்ரல் 2021 முதல் மாநில அரசு விதித்த இரண்டாம் பொதுமுடக்கத்தால் திரைத்துறை மிகவும் பாதிப்படைந்திருக்கிறது. இன்றைய சூழலில் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் வெளியாகமுடியாமலும் தங்கள் மூலதனத்...


