Sunday, November 15

Tag: TakeItEasy

நடன இயக்குநர் ரகுராமின் பேரக்குழந்தைகள் அறிமுகமாகும் ‘டேக் இட் ஈசி!!’!

நடன இயக்குநர் ரகுராமின் பேரக்குழந்தைகள் அறிமுகமாகும் ‘டேக் இட் ஈசி!!’!

News
பிரபல நடன இயக்குநர்கள் ரகுராம் மற்றும் கிரிஜா ரகுராமின் மகள் சுஜா ரகுராம் மனோஜ், தனது தந்தையிடம் நடனம் மற்றும் இயக்குநர் பயிற்சி பெற்றவராவார். பல்வேறு இந்திய மொழிப்படங்களில் இவர் நடித்துள்ளார். கமல்ஹாசன், பிரபுதேவா, கலா மாஸ்டர், பிருந்தா மாஸ்டர் மற்றும் பல்வேறு பிரபல இயக்குநர்களுடன் பணியாற்றி உள்ளார். தொழிலதிபர் மனோஜ் வேணுகோபாலை மணந்த பின்னர் அமெரிக்காவுக்கு சென்ற சுஜா, அங்கு ஹாலிவுட் இயக்குநர்களான பென் & ஜூடி லெவின், பாயு பென்னட் மற்றும் டேனியல் லிர் ஆகியோருடன் பணிபுரிந்துள்ளார். தற்போது இவர், ரகுராமின் பேரக்குழந்தைகளான திரிஷுல் ஆர் மனோஜ் மற்றும் சனா மனோஜ் ஆகியோரை தான் தயாரித்து இயக்க உள்ள படத்தில் நடிகர்களாக அறிமுகப்படுத்த உள்ளார். இசையை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ள இத்திரைப்படத்திற்கு டேக் இட் ஈசி என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஹாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகிறார் சுஜ...